விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மாதாநகர், சித்தாலம்புத்தூர் ஆகிய பகுதிகளில் சார்ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள நீரோடையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளி ஏற்றி வந்த இரண்டு டிராக்டர்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த இருவர் தப்பிச் சென்ற நிலையில், மணல் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், தப்பி ஓடிய ஓட்டுநர்கள் யார் என்பது குறித்து நகர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.