விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலின் வேகம் தற்போது கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. ஏற்கனவே 11 ஆயிரத்து 846 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஆக.22) மேலும் 39 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.
விருதுநகரில் கரோனா உயிரிழப்பு 167ஆக உயர்வு
விருதுநகர்: மாவட்டத்தில் இன்று (ஆக.22) மேலும் 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 885ஆக உள்ளது.
இதன் காரணமாக, கரோனா மொத்த பாதிப்பு 11 ஆயிரத்து 885ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 11 ஆயிரத்து 114 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 604 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள கரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததால், தற்போதைய உயிரிழப்பின் மொத்த எண்ணிக்கை 167ஆக உள்ளது.
இதையும் படிங்க:கரோனா 'நெகட்டிவ்' ரிசல்ட் வந்தவருக்கு சிகிச்சை - தொடரும் மருத்துவத் துறையினர் அலட்சியம்!