மதுரையைச் சேர்ந்த மகேஷ் குமார் தனது குடும்பத்துடன் மதுரையிலிருந்து திருச்செந்தூர் செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்தில் இன்டர்சிட்டி விரைவு ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், தவறுதலாக நாகர்கோவில் நோக்கிச் செல்லும் அந்தியோதயா ரயிலில் ஏறியுள்ளார்.
பின்னர், அவசரமாக கீழே இறங்கி ரயில் மாறியபோது தனது கறுப்பு நிற பையை அந்தியோதயா ரயிலில் மறத்துவைத்துவிட்டு இன்டர்சிட்டி விரைவு ரயிலில் ஏறியுள்ளார்.
சிறிது நேரம் கழித்துதான் வைத்திருந்த பையை அந்தியோதயா ரயிலில் விட்டுவிட்டு வந்ததை அறிந்த அவர் மதுரை ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரில் பையில் மூன்று சவரன் மதிப்புள்ள தங்க வளையல், ரூ.7,200 ரொக்கம் உள்ளது எனத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து விருதுநகர் ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விருதுநகர் வந்த அந்தியோதயா விரைவு ரயிலிலை விருதுநகர் ரயில்வே காவல் துறையினர் சோதனை செய்து மகேஷ்குமார் தவறவிட்டதாகக் கூறிய பையை மீட்டனர்.
பயணி ரயிலில் தவறவிட்ட பையை மீட்ட விருதுநகர் ரயில்வே துறையினர் பின்பு மகேஷ்குமார் விருதுநகர் ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் தான் தவறவிட்ட பை, தங்க நகை, ரொக்கப் பணத்தை உரிய அடையாளத்தைக் கூறி பெற்றுக் கொண்டார்.
விருதுநகர் ரயில்வே காவல் துறையினர் விரைவாகச் செயல்பட்டு பையை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து ரயில்வே காவல் துறையினரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கருத்து!