நாடு முழுவதும் கரோனா தீநுண்மி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் துறையினர் முகத்திரை அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்துவருகின்றனர்.
மேலும், அபராதத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவாவது, உடனடியாக முகத்திரைகளை அணிய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் விருதுநகர் காவல் துறை அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளியில் வரும் மக்களுக்கு காவல் துறையினரே முகத்திரைகளை அணிவித்தும் கரோனா தீநுண்மி குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தியும்வருகின்றனர்.
மேலும், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து எச்சரிக்கையும் விடுக்கின்றனர்.
இதையும் பார்க்க:எம்ஜிஆர் - சிவாஜி படப்பாடல் மெட்டில் கரோனா விழிப்புணர்வு பாடல்: கல்லூரி பேராசிரியர் அசத்தல்!