விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நத்தம்பட்டி செல்லும் சாலையில் பஞ்சாயத்துக்குச் சொந்தமான கிணறு ஒன்று பராமரிப்பின்றி உள்ளது. இந்நிலையில், அப்பகுதி மக்கள் இன்று (அக். 06) அவ்வழியாகச் செல்லும்போது கிணற்றில் துர்நாற்றம் வீசியதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, கிணற்றுக்குள் பார்த்தபோது, சாக்குமூட்டையில் சடலம் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராஜபாளையம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையிலான காவல் துறையினர், கிணற்றில் மிதந்த சடலத்தை மீட்டனர்.