விருதுநகர் அருகே பி.மீனாட்சிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தராத காரணத்தினால் விருதுநகர் மக்களவைத் தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். தொடர்ந்து பல வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணித்த மக்கள்! - மக்களவைத் தேர்தல் 2019
விருதுநகர்: பி.மீனாட்சிபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து தராத காரணத்தினால், தேர்தலை அப்பகுதி மக்கள் புறக்கணித்துள்ளனர்.
virudhunagar people boycott the election
மேலும் விருதுநகர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தொடர்ந்து பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தேர்தலைப் புறக்கணிப்பது மிகவும் தவறான காரியம் என்றும் உங்களது எதிர்ப்புகளை நோட்டாவின் மூலமும் தெரிவிக்கலாம் என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.