விருதுநகர்: திருச்சுழி அருகே வடக்கு நத்தம் கிராமத்தில் டீக்கடை நடத்திக்கொண்டு சமையல் பாத்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருபவர் பாலசுப்பிரமணியன். அதே ஊரைச் சேர்ந்த வள்ளிமுத்து என்பவர் பலசரக்குக் கடை நடத்திக்கொண்டு சமையல் பாத்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.
இருவருக்குமிடையே தொழில் போட்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதே ஊரில் உள்ள ஒரு கட்டடத்திற்கு இருவருக்கும் பங்கு உண்டு என அடிக்கடி சண்டை நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (ஜூலை.16) பாலசுப்பிரமணியன் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்திற்கு நிச்சயதார்த்தத்திற்கு சென்றுவிட்டு வீட்டின் முன்பாக உள்ள தள்ளுவண்டியில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.=