தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கும் முதலமைச்சர்' - மாணிக் தாகூர் எம்.பி., சாடல் - அதிமுகவை சாடி பேசிய மாணிக்கம் தாகூர்

விருதுநகர்: தமிழ்நாடு மக்களை முட்டாளாக்குவது போல் முதலமைச்சர் பேசி வருவதாக மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் தெரிவித்தார்.

manikam thagore
manikam thagore

By

Published : Jan 26, 2020, 7:52 PM IST

விருதுநகரில் காமராஜர் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதில், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு துறையிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதற்கு உதாரணம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு. டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடந்த முறைகேட்டை விசாரணை செய்ய வெளிமாநிலத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற தனி நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாணிக் தாகூர்

அதிமுக அரசு, மத்திய அரசு கொண்டு வரும் சட்டத்தை கண்மூடித்தனமாக ஆதரித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குவது போல் முதலமைச்சர் பேசுகிறார். அதிமுக பாஜகவின் கிளை கட்சி போல் செயல்படுகிறது. தமிழ்நாடு தீவிரவாதிகளின் மாநிலமாக மாறிவருகிறது என பொன்னார் கூறிய கருத்திற்கு ஜெயக்குமார் பதில் சொல்லியே ஆக வேண்டும்‌" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details