விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு இக்கோயிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அப்போது கோயிலில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை காட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.