தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மினி லாரி மீது கார் மோதிய விபத்து: மூவர் உயிரிழப்பு; 15 பேர் படுகாயம் - விருதுநகர் மினி லாரி விபத்து

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மினி லாரி மீது பின்னால் வந்த கார் மோதியதில் இரு பெண்கள் உள்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Virudhunagar Lorry Accident Virudhunagar Accident விருதுநகர் மினி லாரி விபத்து விருதுநகர் லாரி விபத்து
Virudhunagar Lorry Accident

By

Published : Feb 29, 2020, 12:23 PM IST

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள தண்டியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் விவசாய கூலி வேலை செய்ய மினி லாரியில் சென்றனர்.

மினி லாரி அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஒருவர் குறுக்கே வருவதை கண்டு ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

அப்போது, சென்னையிலிருந்து வந்த கார், மினி லாரி மீது பலமாக மோதியது. இதில் மினி லாரி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

விபத்து நடந்த இடத்தில் காவல் துறையினர்

முதல்கட்ட விசாரணையில் காரை அதிவேகமாக இயக்கியது கொப்பு சித்தம்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் பூவலிங்கம் எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கள்ளச்சாராயம் விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details