விருதுநகர் மாவட்டம் மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பிள்ளையார்நத்தம் பகுதியில் கடலூரிலிருந்து குற்றாலம் நோக்கி மரக்கன்றுகளை ஏற்றிவந்த லோடு ஆட்டோவும், ராஜபாளையத்திலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் லோடு ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது.
லோடு ஆட்டோ - கார் நேருக்கு மோதிய விபத்தில் காவலர் படுகாயம்! - லோடு ஆட்டோ கார் விபத்து
விருதுநகர்: பிள்ளையார்நத்தம் பகுதியில் லோடு ஆட்டோவும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காவலர் உள்பட ஓட்டுநரும் படுகாயம் அடைந்துள்ளார்.
![லோடு ஆட்டோ - கார் நேருக்கு மோதிய விபத்தில் காவலர் படுகாயம்! accident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8659645-132-8659645-1599115535524.jpg)
accident
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த காவலர், லோடு ஆட்டோ ஓட்டுநர் ஆகிய இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அதையடுத்து அவர்கள் சம்பவம் இடத்தில் இருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து: நால்வர் உயிரிழப்பு!
Last Updated : Sep 3, 2020, 2:33 PM IST