விருதுநகர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு சிவகாசி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக கூறி மாவட்டத்திலுள்ள பிற ஒன்றியங்களுக்கு பணி நிரவல் செய்யப்பட்டனர். இந்த பணி நிரவல் நடைமுறைகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து பணி நிரவலுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இந்த உத்தரவை வைத்து இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஜனவரி ஏழாம் தேதி அளித்தனர். அதனடிப்படையில் மற்ற மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளுக்கே ஆசிரியர்களை பணியேற்பு செய்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டனர்.