குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டி தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜுன் சம்பத் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் திருக்கோயிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட தலைவா் லெனின் தலைமையில் தேங்காய் உடைக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோயில் கருவறை அருகே நின்று சாமி கும்பிடும்போது திடீரென்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. பின்னா் கோயில் வாசலில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும் அந்த சட்டத்தை எதிர்ப்பவா்களுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டியும் கோஷம் எழுப்பி 108 தேங்காய்களை உடைத்தனா்.
இந்து மக்கள் கட்சியின் தேக்காய் உடைப்பு போராட்டம் இதையும் படியுங்க:போராட்டத்திற்கு ஆதரவு கோரிய சந்திரபாபு நாயுடு!