விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள நீராவிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன் (31). இவர் வேலையில்லாத பட்டதாரியாக இருந்தாலும் 30க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்துவருகிறார். இன்று காலை ஆடுகளை கூட்டிக்கொண்டு காடுகளில் மேய்த்துவிட்டு, மதியம் வீட்டிற்கு திரும்ப அழைத்துக்கொண்டு வந்து தண்ணீர் விட்டு தொழுவில் அடைத்துள்ளார்.
அப்பொழுது ஆடுகள் துடிதுடித்து சுருண்டு விழுந்துள்ளன. இதை கண்டு செய்வதறியாது திகைத்து நின்ற சிவராமன் அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார். உடனே அருகில் இருந்த உறவினர்கள் கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து மருத்துவர்களை வரவழைத்தனர்.