விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே 9 ஆயிரத்து 773 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ள நிலையில் இன்று மேலும் 193 பேருக்கு தோற்று உறுதியாகியிருக்கிறது.
விருதுநகரில் ஒரே நாளில் கரோனாவால் 13 பேர் உயிரிழப்பு! - தமிழ்நாடு கரோனா செய்தி
விருதுநகர்: கரோனா சிகிச்சைப் பலனின்றி இன்று ஒரே நாளில் மட்டும் 13 பேர் உயிரிழிந்துள்ளனர். மேலும் புதிதாக 193 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மொத்த எண்ணிக்கையாக 9 ஆயிரத்து 966 ஆக உள்ளது. மேலும் இதுவரை 8 ஆயிரத்து 66 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். ஆயிரத்து 766 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 134ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:கரோனா பயமின்றி முனீஸ்வரனுக்கு படையல் வைத்த கிராம மக்கள்