தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்காச்சோளப் பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்' - வேதனைப்பட்ட விவசாயிகள் - மக்காச்சோளப் பயிர்களை நாசம் செய்யும் காட்டு பன்றிகள்

விருதுநகர் : மக்காச்சோளப் பயிர்களை காட்டுப் பன்றிகள் நாசம் செய்வதைத் தடுக்க  நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

virudhunagar former issue
farmers_issue

By

Published : Nov 26, 2019, 1:09 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இ. குமாரலிங்கபுரம், சின்னாக்காமன்பட்டி, மேட்டமலை, சின்னவாடி ஆகிய கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 2 ஆயிரத்து 400 ஏக்கர் மக்காச்சோளப் பயிர்களைப் பயிரிட்டு உள்ளனர்.

தற்போது அப்பகுதியில் உள்ள காட்டுப் பன்றிகள் பயிரிடப்பட்ட மக்காச் சோளப் பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும்; பன்றிகளை விரட்ட சிரமம் அடைவதாகவும்; இதனால் மக்காச்சோள விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

விருதுநகர் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மேலும், சென்ற ஆண்டு போல் அமெரிக்கன் படைப்புழுவால் வளர்ப்புப் பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இவற்றை மாவட்ட நிர்வாகம் கருத்தில் கொண்டு பயிர்களைக் காப்பாற்ற தங்களுக்கு உதவ வேண்டும் எனக் கூறி, பாதிக்கப்பட்ட விவசாயிகள் 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:

சாலையில் நாய் குறுக்கே வந்ததால் நேர்ந்த விபத்து: காவலர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details