தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தலில் மனைவி தோல்வி: மாரடைப்பில் கணவர் உயிரிழப்பு! - Local Election Wife Failure Husband Death

விருதுநகர்: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட மனைவி தோற்றதால் மனமுடைந்து காணப்பட்ட அவரது கணவர், மாரடைப்பில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Virudhunagar election failure death
Virudhunagar election failure death

By

Published : Jan 3, 2020, 11:27 PM IST

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ராமசாமிபுரத்தைச் சேர்ந்தவர் நயாபைசா (48). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி லிங்கம்மாள். இவர், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட 9வது வார்டு பகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதனால் மனவேதனையுடன் காணப்பட்ட நயாபைசா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பணியின்போது மாரடைப்பு! பயணிகளைக் காப்பாற்றி ஓட்டுநர் மரணம்!

ABOUT THE AUTHOR

...view details