இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்வேறு வகையான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மாநில அரசு தொழிற்சங்கங்கள், உடலுழைப்போர் சங்கங்களுக்கு நிவாரண தொகை, நிதி உதவியையும் வழங்கியுள்ளது.
இதன் மூலம் கட்டட தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் என பல்வேறு தொழில் செய்துவரும் தொழிலாளர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கியுள்ளது. இதுபோல் தமிழ்நாடு முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்கள் உள்ளனர்.
அரசு நலத்திட்டங்களை வழங்க கோரிக்கை இதையடுத்து, விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக, இலகுரக வாகன ஓட்டுநர்களுக்கு அரசு வழங்கும் 1,000 ரூபாய் நிதியுதவி தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தாங்கள் 20 நாள்களுக்கு மேலாக வாழ்வாதார பிரச்னையை சந்தித்து வருவதாகவும் கூறி தங்களுக்கு நிதியுதவி பெற்றுத் தர உதவி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம், ஓட்டுநர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க... முதல்வரின் நிவாரண நிதிக்கு 500 ரூபாய் வழங்கிய பழங்குடியினர்