தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நியாய விலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள்: திமுக மனு! - நியாய விலைக் கடைகளில் தரமற்ற பொருட்கள்

விருதுநகர்: நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக பொதுமக்களின் குற்றச்சாட்டை சரி செய்து தரக்கோரி திமுக எம்.எல்.ஏக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து மனு அளித்தனர்.

நியாய விலைக் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக அமைச்சர்கள் மனு!
நியாய விலைக் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக அமைச்சர்கள் மனு!

By

Published : Apr 7, 2020, 10:45 AM IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் சீனிவாசன், ராஜபாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் கண்ணனை சந்தித்து பல்வேறு கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், ”ஊரடங்கு உத்தரவின்போது நியாய விலைக் கடையின் மூலமாக அரசு வழங்கி வரும் அரிசி மற்றும் இதர பொருட்கள் குறித்து ஆய்வு செய்தபோது அவை தரமற்றதாத இருப்பாதாக தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு பொது மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

நியாய விலைக் கடைகளில் தரமற்ற பொருட்களை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக அமைச்சர்கள் மனு!

மேலும் விருதுநகரின் மருத்துவ ஏற்பாடுகள் முழுமையாக அனைவருக்கும் கிடைக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் முழுமையாக கிடைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் வைத்துள்ளோம்” என்றனர்.

இதையும் படிங்க...சென்னை மருத்துவருக்குக் கரோனா தொற்று!

ABOUT THE AUTHOR

...view details