தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி - Virudhunagar disabilities Contestants Sports Competition

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி விருதுநகரில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி
மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

By

Published : Jan 29, 2020, 9:19 PM IST

விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் கண்ணன் தொடங்கிவைத்தார்.

இதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, திருத்தங்கல் ஆகிய தாலுகாவில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு கைப்பந்து, கால்பந்து, கபடி, ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

பின்னர், போட்டியில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினார். மேலும், வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிங்க:விளையாட்டு விபரீதமானதால் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details