தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகர் மாவட்டத்தில் 182 மனுக்கள் ஏற்பு

விருதுநகர்: மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிட தாக்கல்செய்யப்பட்ட 252 வேட்புமனுக்களில் 189 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

By

Published : Mar 20, 2021, 10:27 PM IST

virudhunagar
virudhunagar

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதிமுதல் தொடங்கி மார்ச் 19ஆம் தேதி நிறைவுற்றது. இன்று (மார்ச் 20) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என 252 வேட்புமனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இதில் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தகுதியுடைய வேட்புமனுக்கள் என சுமார் 189 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு 63 வேட்புமனுக்களை நிராகரித்தனர்.

ராஜபாளையம் தொகுதியில், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருச்சுழி தொகுதியில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் வேட்பாளர்களாகத் தாக்கல்செய்த வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொகுதி வாரியான வேட்புமனுக்கள் ஏற்பு, நிராகரிப்பு விவரங்கள் பின்வருமாறு:

தொகுதி எண் தொகுதி மொத்தம் தேர்வு நிராகரிப்பு
202 ராஜபாளையம் 31 25 6
203 ஸ்ரீவில்லிபுத்தூர் 38 25 13
204 சாத்தூர் 40 27 13
205 சிவகாசி 47 31 16
206 விருதுநகர் 31 20 11
207 அருப்புக்கோட்டை 34 30 4
208 திருச்சுழி 31 21 10

ABOUT THE AUTHOR

...view details