விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளிலும், 2,370 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வாக்கு செலுத்தினார் - வாக்கு பதிவு
விருதுநகர்: மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கண்ணன், தனது குடும்பத்துடன் வந்து வாக்கினை செலுத்தினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வாக்கு செலுத்தினார்
மேலும் தேர்தலில் பணியாற்றி வரும் அலுவலர்கள், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு முகக்கவசம் மற்றும் கையுறைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கண்ணன் தனது இல்லத்தரசியுடன் வந்து, தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.
இதையும் படிங்க: பெட்ரோல் டீசல் விலைவாசியைக் கண்டித்தாரா? - ட்விட்டர் ட்ரெண்டிங்கில் மாஸ் காட்டும் விஜய்