விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, திருச்சுழி, பந்தல்குடி, நரிக்குடி, பாலையம்பட்டி போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சமூக வனக் காடுகளில் மான்கள், முயல்கள், காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. போதிய மழை இல்லாததால் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வறண்டு காடுகளில் வாழும் விலங்குகள் தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் வருகின்றன.
தற்போது அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதால் அதைத் உண்பதற்காக அதிக அளவு மான்கள் வருகின்றன. அவ்வாறு வரும்போது நாய்கள் தாக்கியும் வாகனங்களில் அடிபட்டும் அடிக்கடி காட்டு விலங்குகள் இறந்து விடுகின்றன.