விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரத்தில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குத்தகைதாரரான விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக உள் குத்தகைதாரர் பொண்ணு பாண்டி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலை உரிமையாளர் சந்தனமாரி மற்றும் குத்தகைதாரர்கள் ராஜா, வேல்ராஜ் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து - மேலும் ஒருவர் கைது! - அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலை வெடிவிபத்து
விருதுநகர்: அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து விவகாரத்தில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
விருதுநகர்
சாத்தூா் அருகே அச்சங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பிப்ரவரி 12ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் இதுவரை 20 தொழிலாளா்கள் உயிரிழந்த நிலையில் 20க்கும் மேற்பட்டவா்கள் சாத்தூர் மற்றும் சிவகாசியில் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.