தமிழ்நாடு

tamil nadu

விருதுநகர், தனியார் பஞ்சாலையில் பற்றி எரிந்த தீ

By

Published : Mar 22, 2020, 11:38 PM IST

விருதுநகர்: வன்னியம்பட்டி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பஞ்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

Tn vnr fire accident  Virudhunagar, Cotton Mill burned, Police Investigation!  Virudhunagar Cotton Mill burned  விருதுநகரில் தீ பற்றி எரிந்த பஞ்சாலை  விருதுநகர் தீ விபத்து, பஞ்சாலை தீ விபத்து
Tn vnr fire accident Virudhunagar, Cotton Mill burned, Police Investigation! Virudhunagar Cotton Mill burned விருதுநகரில் தீ பற்றி எரிந்த பஞ்சாலை விருதுநகர் தீ விபத்து, பஞ்சாலை தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர்- ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி பகுதியில் தங்க பாக்கியா பஞ்சு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த பஞ்சு ஆலையில் சுமார் 80க்கு மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த அறையில் மின் கசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் இரு வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து நாசமனது.

விருதுநகரில் தீ பற்றி எரிந்த பஞ்சாலை!

இன்று கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. இந்த உத்தரவை மீறி தனியார் பஞ்சாலை செயல்பட்டு வந்ததால் இந்த தீ விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தண்டோரா முழக்கத்துடன் கரோனா விழிப்புணர்வு!

ABOUT THE AUTHOR

...view details