தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி - விருதுநகர் மாவட்ட செய்திகள்

விருதுநகர் : ஒரே நாளில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 538 ஆக உயர்ந்துள்ளது.

Virudhunagar Corona Update
Virudhunagar Corona Update

By

Published : Jul 2, 2020, 10:37 AM IST

விருதுநகரில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவு தொழிலாளர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கரோனா தொற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விருதுநகரில் ஒரே நாளில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து தற்போது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 538 ஆக உள்ளது.

மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையும் படிங்க: ஜூலை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அரசு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details