விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏற்கனவே 872 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், நேற்று (ஜூலை 07) மேலும் 253 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இதுவரை 1,228 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
விருதுநகரில் ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு - Virudhunagar corona death rate
விருதுநகர்: நேற்று ஒரே நாளில் (ஜூலை 07) புதிதாக 253 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,228ஆக உயர்ந்துள்ளது.
virudhunagar
இதுவரை 548 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 670 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனாவால் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உள்ளது.
இதையும் படிங்க:கடலூரில் கரோனாவிலிருந்து குணமடைந்த 930 பேர் டிஸ்சார்ஜ்!