கடந்த 6ஆம் தேதி, நமது ஈடிவி பாரத்தில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக, பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையையும், பட்டாசு தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசிடம் வைக்கும் கோரிக்கையையும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக, விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்துள்ள தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்களுக்கு 7,500 ரூபாய் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்க்கும் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டிலுள்ள அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. இதில், சிவகாசி பட்டாசுத் தொழிலும் விதிவிலக்கல்ல. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும், சுமார் 1,100 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.