கரோனா தொற்றால் பாதிப்படைந்த நோயாளிகளின் பயன்பாட்டிற்காக நடமாடும் நுண்கதிர்வீச்சு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கண்ணன் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் கண்ணன் கூறுகையில், " விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 8,491 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 2,431 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளைத் தவிர தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நோய்த் தொற்றின் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, நடமாடும் நுண்கதிர்வீச்சு வாகனம் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாகனத்தின் மூலம் பாதிக்கப்பட்ட நபரின் நுரையிரலில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அறிந்து கொள்வதோடு, அதற்கு ஏற்ற வகையில் சிகிச்சை முறையை மாற்றிக்கொள்ள முடியும்.