தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகாசியில் வெடி விபத்து - சம்பவ இடத்தில் ஆட்சியர் ஆய்வு - சிவகாசி வெடி விபத்து

சிவகாசியில் பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மூவரை கட்டட இடிபாடுகளுக்குள் தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு ஆட்சியர் மேகநாத ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள்
மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள்

By

Published : Nov 16, 2021, 5:13 PM IST

விருதுநகர்: சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ள நேருஜி நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் அதிகமான மக்கள் நடமாட்டமுள்ள பகுதியாகும். இந்நிலையில் ராமநாதன் என்பவர் இங்கு சொந்தமாக வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இவர் பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் குழாய் கம்பெனி நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவரது வீட்டில் சட்டவிரோதமாக பேன்சி ரக பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத நேரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் திடீரென வெடித்ததில் கட்டடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் வேல்முருகன், மனோஜ் குமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வெடி விபத்து

மேலும் இப்பகுதியில் இருந்த பஞ்சவர்ணம், கார்த்தீஸ்வரன், சமீதா ஆகிய மூவரும் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில், வெடி தொடர்ந்து வெடித்துக் கொண்டு இருந்ததாலும் தொடர்மழை காரணமாகவும் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இருப்பினும் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர். குழாய் கம்பெனி உரிமையாளர் ராமநாதன் தப்பி ஓடிய நிலையில் இந்த வெடி விபத்து குறித்து சிவகாசி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரத்தில் மீட்பு பணி சாத்தியமில்லை என்பதால் மீட்புப் பணி நிறுத்தப்பட்டு இன்று (நவ.16) காலை மீட்பு பணி தொடங்கியது. ஐந்து ஜேசிபி வாகனங்கள் கொண்டு அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் கணேசன் தலைமையிலான 30 தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர்கள்

மீட்புப் பணி தீவிரம்

மேலும் மதுரை வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் அப்பகுதிக்கு வந்து சோதனை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கல ராமசுப்பிரமணியன் தொடர்ந்து மீட்பு பணி நடைபெறும் இடத்தில் பார்வையிட்டு வருகிறார். இரண்டு நாள்களாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் கட்டட இடிபாடுகளுக்கு இடையே யாரேனும் சிக்கியுள்ளனரா என்று தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க:krishnagiri bike accident: அரசு பேருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details