விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த மனோகரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "ராஜபாளையம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டுவருகின்றன. இவற்றில் பல விதிமீறிய செயல்களில் நடைபெறுகின்றன.
விருதுநகர் மனமகிழ் மன்றங்களை மூடக்கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - TN Assembly Election 2021
விருதுநகர்: ராஜபாளையம் பகுதியில் உள்ள மனமகிழ் மன்றங்களை மூடக்கோரிய வழக்கில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல சமூக கேடான நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இந்த மனமகிழ் மன்றங்கள் அதிக வருவாய் ஈட்டுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டுவருகின்றன. இவை தொடர்பாக நடவடிக்கைக் கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் உள்ள மனமகிழ் மன்றங்களை மூடவோ அல்லது முறைப்படுத்தவோ உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.