தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சித் தலைவர் பதவி போட்டி; வங்கி மேலாளர் அடித்துக் கொலை; அதிமுக கிளைச் செயலாளர் கைது

விருதுநகர்: ஊராட்சித் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரத்தில் தட்டிக்கேட்ட வங்கி மேலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder
murder

By

Published : Dec 12, 2019, 1:45 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டைப்பட்டி என்னும் கிராமம் உள்ளது. இங்கு 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனையடுத்து வருகிற உள்ளாட்சித் தேர்தலில் கோட்டைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நள்ளிரவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலர் ராமசுப்பு என்பவர், தான் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு வாங்கியுள்ளார். இக்கூட்டத்திற்கு ராமசுப்பு குறிப்பிட்ட சமுதாயத்தினரை மட்டும் அழைக்காமல் தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் அழைத்து பேசியுள்ளார். இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரது மகன் சதீஷ்குமார் அக்கூட்டத்திற்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். மேலும் தனது அண்ணன் சுப்புராம் முறையாக தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்துள்ளதால் அவரையும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பும் அவரது கூட்டாளிகளும் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்து சதிஷ் குமார் சுயநினைவையிழந்து மயங்கியுள்ளார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சதிஷ்குமாரை சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இதுகுறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அதிமுக கிளைச் செயலர் ராமசுப்பு, அவரது ஆதரவாளர்களான கணேசன், முத்துராஜ், சுப்புராம், ராம்குமார், சுப்புராஜ், செல்வராஜ் ஆகிய 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் சிவகாசியில் உள்ள தனியார் வங்கியில் விற்பனை பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார். ஊராட்சி தலைவர் பதிவிக்கு போட்டியிடுவது குறித்து தட்டிக் கேட்ட வங்கி மேலாளரை அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. தொடர்ந்து அங்கு மோதல்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details