தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்! - candidates file nomination news

விருதுநகர்: அமமுக வேட்பாளர் கோகுலம் தங்கராஜ் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்தார்.

விருதுநகரில் அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்!
விருதுநகரில் அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்!

By

Published : Mar 18, 2021, 10:10 AM IST

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி 16ஆவது சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அமமுகவின் விருதுநகர் வேட்பாளர் கோகுலம் தங்கராஜ் இன்று (மார்ச்.18) வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தானலட்சுமியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தார். முன்னதாக எம்ஜிஆர் சிலை தொடங்கி மெயின்பஜார் வழியாக ஊர்வலமாக அமமுகவின் சின்னமான குக்கரை கையில் வைத்துக்கொண்டு, ஏராளமான கட்சி மற்றும் கட்சி நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.

விருதுநகரில் அமமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்!

விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தானலட்சுமியிடம் வேட்புமனுவை அளித்து வெளியே வந்த கோகுலம் தங்கராஜ், தனக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...'கமல் ஒரு அரை வேக்காடு' - செந்தில் பாலாஜி தாக்கு

ABOUT THE AUTHOR

...view details