விருதுநகர் அருகே மல்லாங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன் (54). இவர் தனது இருசக்கர வாகனத்தில் விருதுநகரிலிருந்து மல்லாங்கிணறு நோக்கி தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பாண்டியன் நகர் அருகே எதிரே வந்த தனியார் எண்ணெய் நிறுவன மினி லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது,
இதில் சம்பவ இடத்திலேயே சங்கரநாராயணன் உயிரிழந்தார். விபத்து குறித்து பொதுமக்கள் பாண்டியன் நகர் காவல்துறை யினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.