விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வேலைக்குச் சென்று நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக இவரது உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், சேத்தூர் ஊரக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கண்ணனின் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கண்ணனை அரிவாளால் வெட்டிக் கொன்ற கும்பல் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.