விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு கடந்த 15, 16, 17, 18 ஆகிய 4 நாட்கள் பக்தர்கள் சென்று தரிசிக்க கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வந்த 4 பக்தர்களுக்கு கரோனா உறுதி - விருதுநகர் பக்தர்களுக்கு கொரோனா
விருதுநகர்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு மஹாளய அமாவாசையை முன்னிட்டு 16 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்த நிலையில், அதில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
temp
அதன்படி, தரிசனம் நடைபெற்ற 4 நாள்களில் சுமார் 16 ஆயிரத்து 380 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில், 1700 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில், 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாவட்ட சுகாதாரத்துறை அந்நாள்களில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்