தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நோபல் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்த மூன்றாம் வகுப்பு மாணவி! - 3 grade student

விருதுநகர்: யோகாசனத்தில் உலக சாதனை படைத்து, நோபல் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில்மூன்றாம் வகுப்பு மாணவி இடம்பெற்றுள்ளார்.

TN Student_Nobel Prize

By

Published : Mar 9, 2019, 5:54 PM IST

விருதுநகர் மாவட்டம், செவல்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருபவர் மாணவி முஜிதா. இவர் யோகாவில் மாநில மற்றும் தேசிய அளவில் பல சாதனைகள் படைத்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, யோகாவில் கண்டபேருண்டாசனம் செய்தவாறு முன்னால் இருந்த பத்து முட்டைகளை 47 நொடிகளில் கிண்ணத்தில் எடுத்து வைத்து நோபல் ரெக்கார்ட்ஸில் உலக சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவி முஜிதாவிற்கு நோபல் ரெக்கார்ட்ஸ் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதற்கு முன்பு 20 நொடிகளில் 6 முட்டையை திருப்பூரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி வைஷ்ணவி சாதனை படைத்தார். அந்த சாதனையை தற்போது முஜிதா முறியடித்துள்ளார்.

சாதனை படைத்த மாணவி முஜிதாவிற்கு, பயிற்சியாளர் ஜெயகுமார், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details