தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி பறிமுதல் - லாரி ஓட்டுநர் தப்பி ஓட்டம்! - virudhunaga district news

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி சாமிநத்தம் பகுதியில் குண்டாற்றில் மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

virudhunaga sand theft
virudhunaga sand theft

By

Published : Oct 7, 2020, 1:30 PM IST

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் திருட்டுத்தனமாக அடையாளம் தெரியாத நபர்களால் மணல் அள்ளப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது சாமிநத்தம் பகுதியில் ஒரு சிலர் லாரியில் மணல் அள்ளி உள்ளனர்.

காவல் துறையினரை கண்டவுடன் லாரி ஒட்டுநர் லாரியில் வேகமாக சென்று தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் காவல் துறையினர் லாரியை விரட்டிச் சென்றுள்ளனர். இதனால் அச்சமடைந்த லாரி ஓட்டுநர் லாரியில் இருந்து கீழே குதித்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். ஓட்டுநர் கீழே குதித்த நிலையில் லாரி சாலையோர பள்ளத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

மணல் திருட்டில் ஈடுபட்ட லாரி பறிமுதல்

இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் லாரி உரிமையாளர், தப்பி ஓடிய ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

காயங்களுடன் அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details