விருத்தாசலம் அடுத்த ஐவதுகுடி சமத்துவபுரத்தைச் சேர்ந்த மாணவி புவனா (15), இவரும் இவருடைய தோழியுமான சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா என்பவரும் ஐவதுகுடி அருகே உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவருகின்றனர்.
இன்று காலை இருவரும் மிதிவண்டியில் பள்ளிக்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சென்னையிலிருந்து நைனார்பாளையம் நோக்கி வந்த டாடா சுமோ கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, புவனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.