தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஒன்றிய கவுன்சிலர் கணவருக்கு அரிவாள் வெட்டு - காவல் துறை விசாரணை - திமுக கவுன்சிலரின் கணவரை

முன்விரோதம் காரணமாக திமுக கவுன்சிலரின் கணவரை வெல்டிங் கடை உரிமையாளர் வீடு புகுந்து வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் செய்திகள்
விருதுநகர் செய்திகள்

By

Published : Oct 3, 2021, 2:23 PM IST

விருதுநகர்: சூலக்கரை கணபதி மில் காலனியைச் சேர்ந்த பாண்டியராஜன் ரியல் எஸ்டேட் தரகராக உள்ளார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி திமுகவின் ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். பாண்டியராஜன் வீட்டின் அருகில் வசிப்பவர் இராமசாமி. இவர் வெல்டிங் வேலை செய்துவருகிறார்.

பாண்டியராஜனுக்கும் ராமசாமிக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுவந்துள்ளனர். இந்த நிலையில் இன்று பாண்டியராஜன் அவருடைய வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது ராமசாமி பாண்டிராஜனுடன் சண்டை போட்டுள்ளார்.

அப்போது ராமசாமி தான் மறைத்துவைத்திருந்த அரிவாளை வைத்து பாண்டியராஜனை வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாண்டியராஜன் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்துள்ளார்.

வெட்டுக் காயங்களுடன் பாண்டியராஜன் ஓடிவருவதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக சூலக்கரை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் அருகிலிருந்தவர்கள் பாண்டியராஜனை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்து மருத்துவர்கள் அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த சூலக்கரை காவல் துறையினர் அருகிலிருந்தவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து சூலக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ராமசாமியைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:கப்பலில் உல்லாச போதை விருந்து - ஷாருக்கான் மகன் உள்பட 13 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details