விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலில் இன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் நிகழ்வதையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டு, திருப்பாவை, திருவெம்பாவை பாடி ஸ்ரீஆண்டாளுக்கு சிறப்புப் பூஜையுடன் கோயில் நடை காலை 8 மணிக்கு மூடப்பட்டது.