விருதுநகர்:மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது இந்நிலையில் சாத்தூர் வெற்றிலை ஊரணியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வரவு செலவு கணக்கு விவரங்களை பஞ்சாயத்துச் செயலாளர் செந்தில் முறையாக ஒப்படைக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.
அதற்குப் பஞ்சாயத்துத் தலைவர் சுந்தரவல்லி ஒத்துப் போவதாகவும் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் செயலாளர் இருவரையும் கண்டித்து பொதுமக்கள் கூச்சலிட்டதால் நேற்று கிராம சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கிராம சபைக் கூட்டம் நடைபெற வேண்டும் என வெற்றிலையுரணி கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அமர்ந்தனர்.
ஆனால் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் கிராம சபைக் கூட்டத்தினை புறக்கணித்து வராததால் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சாகுல் ஹமீது பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.