விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள செம்பட்டியைச் சேர்ந்தவர் சின்னமுத்து. இவர் அருப்புக்கோட்டை நகர்ப் பகுதியில் புதியதாக இடம் வாங்கியுள்ளார். அந்த இடத்தை நில அளவு செய்து பட்டா மாறுதல் செய்துதர அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டுவரும் நகர நில அளவை அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அங்கு பணிபரியும் நில அளவையர் சிவசங்கரன், அவரது உதவியாளர் சூரிய நாராயணன் இருவரும் பட்டா பெயர் மாறுதலுக்காக ரூ.15,000 கையூட்டு கேட்டுள்ளார்கள். இறுதியாக ரூ.12,000 கொடுப்பதாக சின்னமுத்து சம்மதித்துள்ளார்.