விருதுநகர்: இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மேலப்பாட்ட கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை கற்பகராஜ். இவர் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது ஊராட்சி ஒன்றிய துணைச் சேர்மனாக இருந்து வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றபின் அப்பகுதிக்கு எந்த அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி ஊரக வளர்ச்சி துறைக்கும் மாவட்ட ஆட்சி தலைவருக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில் தன் மீது அடிக்கடி புகார் மனு அனுப்பும் அப்பகுதி பகத்சிங் என்ற இளைஞர் நியாய விலை கடையில் பொருள்கள் வாங்க வந்தார். அப்பகுதிக்கு வந்த திமுக துணைச் சேர்மன் துரை கற்பகராஜ். பகத்சிங்கை தகாத வார்த்தைகளால் திட்டி பொது மக்கள் முன்னிலையிலேயே பணம் வாங்கிக் கொண்டு தானே ஓட்டுப் போட்ட? இப்போது உன்னால் என்ன செய்ய முடியும் போடா? என இளைஞரை தாக்கியுள்ளார்.