தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பணியாளரை எட்டி உதைக்கும் அதிகாரி - வீடியோ வைரல்!! - Srivilliputhur Andal temple

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

By

Published : May 21, 2022, 12:52 PM IST

விருதுநகர்: தமிழக அரசு முத்திரைச் சின்னமாகவும் 108 வைணவ தலங்களில் மிக முக்கியத் தலமாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஆண்டாள் கோவில், சக்கரத்தாழ்வார் சன்னதி, கோபுரவாசல் மற்றும் அலுவலகப் பணிகளுக்காக செயல் அலுவலர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் தெருவில் வசித்து வரும் ஆண்டாள் கோவிலில் பணியாற்றும் கர்ணன் என்பவருக்கு செயல் அலுவலர், ஒரு சில அதிகாரிகள் கடுமையான பணி தருவதாகவும், உடல் ரீதியான பிரச்சனைகளை செயல் அலுவலரிடம் தெரிவித்தும் வேண்டுமென்றே இரவு பணி வழங்கப்படுவதாகவும், இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

மேலும் அதிகாரிகள் பணியாட்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சிப்பதாகவும், பெரும்பாலான பணியாளர்கள் அதிகாரிகளுக்கு பயந்து வெளியில் கூறுவதில்லை எனவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கோவில் கணக்கர் சுப்பையா என்பவரை செயல் அலுவலர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ரூ.7000 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற உதவி செயற்பொறியாளர் கைது

ABOUT THE AUTHOR

...view details