விருதுநகர் என்.ஜி.ஓ., காலனி கங்கை தெருவை சேர்ந்தவர் நீலமேகம். இவர் 1922ஆம் தேதி ஜூன் 21ல் பிறந்தார். பின்னர், 1941- 47வரை இந்திய ராணுவத்தில் ஒன்றிய பிரதேசம் ஜபல்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். இருப்பினும், 1946ல் இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் ஜாவா தீவு, சிங்கப்பூர் நாடுகளில் நடந்த போரில் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக போர் புரிய இந்திய ராணுவம் கடல் வழி பயணம் மேற்கொண்டார்.
இதையடுத்து, நீலமேகம் 1947க்கு ஓய்வு பெற்ற பின்னர் தனது சொந்த ஊரான விருதுநகரில் ரேடியோ ரிப்பேர் செய்யும் கடையை நடத்திவந்தார். வயது மூப்பு காரணமாக தனது தொழிலை, பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுத்துவருகிறார்.
இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ஓய்வு ராணுவ வீரர் : 100வது பிறந்த நாள்! இந்நிலையில், தனது 99 வயது முடிந்து 100ஆவது பிறந்தநாள் இன்று (ஜூன். 22) தொடங்கியதை பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
நீலமேகத்திற்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள், ஐந்து பேரன்கள், நான்கு பேத்திகள், நான்கு கொள்ளு பேரன்கள், எட்டு கொள்ளு பேத்திகள் என பெரிய குடும்பமே உள்ளது.
தற்போது வரை நல்ல செவி, பார்வைத்திறனுடன் சகஜமாக ஆரோக்கியமாக பேசி வருகிறார். நீலமேகம், ’’ஜீலம் முதல் ஜகார்த்தாவரை’’ என தன் போர்க்கால அனுபவங்கள் குறித்து சுயசரிதை புத்தகமும் எழுதி வருகிறார்.
இதுகுறித்து, நீல மேகம் கூறுகையில் ’’மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு கட்டுப்பாடுகள் அவசியம், ஆரோக்கியம், ஒழுக்கம் என தனிமனிதன் தன்னை முழுமையாக கவனித்துக்கொள்ளும் போது அவன் ஆயுள் அவனுக்கு வசப்படுகிறது. அனைவரும் தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டாலே நிறைவான வாழ்வு வாழ முடியும்’’ என கூறினார்.
இதையும் படிங்க: தொழுகை முடிந்து வீடு திரும்பிய காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை!