விருதுநகர் மாவட்ட நிர்வாக ஆய்விற்காக நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவுள்ளார். அப்போது நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.
அப்போது பெண் கிராம உதவியாளர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். சாத்தூரைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரின் மனைவி ராஜேஸ்வரி தனது கணவன் உயிரிழந்த பின்பு வாரிசு அடிப்படையில் கிராம உதவியாளராகப் பணியில் அமர்த்தப்பட்டார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்துவருகிறார்.
தற்போது அச்சன்குளத்திலிருந்து கொடுக்கன்பட்டிக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தன்னை தொடர்ந்து பணி இடமாற்றம் செய்து துன்புறுத்துவதாகக் கோரி ஆட்சியர் அலுவலக வாயிலில் ராஜேஷ்வரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பெண் கிராம உதவியாளர் திடீர் தர்ணா! அமைச்சர் ஆய்வின்போது திடீரென கிராம உதவியாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் அடைந்த காவல் துறையினர் அவரை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். பின்பு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க:வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு: திருவாரூரில் ஆர்ப்பாட்டம்!