விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் ஏ. ஆர்.ஆர். சீனிவாசனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, மாணவர்களின் அனைத்து உரிமைகளையும் பிஜேபி அரசு பறிக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. நீட் தேர்வு கொண்டு வந்ததால் அனிதா தொடங்கி 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு நீதி வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று அதிமுகவினர் பொய் நாடகம் ஆடுகின்றனர்.
பட்டாசு தொழிலை முறைப்படுத்த நடவடிக்கை - உதயநிதி ஸ்டாலின் - தமிழ்நாடு தேர்தல்
விருதுநகர்: திமுக ஆட்சி வந்தவுடன் பட்டாசு தொழிலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சி அமைந்தவுடன் கரோனா நிவாரண தொகை ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ. 4 ஆயிரம் வழக்கப்படும். பட்டாசு தொழிலை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு நீங்கள் திமுகவிற்கு வாக்கு அளிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் வரை குறையும். அதுமட்டுல்லாது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது தொடர்பான மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப்பட்டு உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.