தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கம் தென்னரசு தாயார் மறைவு: உதயநிதி ஸ்டாலின் இரங்கல் - தங்கம் தென்னரசு தாயார் மரணம்

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் தாயாரின் உடலுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தார்.

rajamani death
rajamani death

By

Published : Oct 5, 2020, 12:56 PM IST

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரின் தாயார் ராஜாமணி நேற்றிரவு (அக்.4) உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

இன்று (அக்.5) மாலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள நிலையில், மல்லாங்கிணறு கிராமத்தில் உள்ள ராஜாமணியின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேரில் அஞ்சலி செலுத்திய உதயநிதி

இந்நிலையில், ராஜாமணியின் உடலுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, தங்கம் தென்னரசு மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதையும் படிங்க:ஹத்ராஸ் விவகாரம்: பீம் ஆர்மி தலைவர் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details