விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் பகுதியில் இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்த அறிவுராஜ், தவமணி இருவரும் நண்பர்களுடன் நேற்று அப்பகுதியில் உள்ள கிணற்றுக்கு குளிக்கச் சென்றனர். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் இவர்களது பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் தேடி, காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
இப்புகாரின்பேரில் கிணற்றில் மூழ்கியிருக்கலாமோ என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கிய காவல் துறையினர், ராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அதிகாலை முதல் கிணற்றில் உடல்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் அறிவுராஜ் என்பவர் மட்டும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சூழலில், தவமணியின் உடலை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தளவாய்புரம் காவல் நிலைய காவலர்கள், உறவினர்கள், நண்பர்களிடையே பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி பலி!
விருதுநகர்: ராஜபாளையம் அருகே முகவூர் பகுதியில் கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
இதையும் படிங்க: காவலரின் மூக்கை கடித்து துப்பிய ராணுவ வீரர்...இது மதுரை சம்பவம்!